நட்பு
செல்வம் நண்பர்களை ஆக்கும் வறுமை அவர்களைச் சோதிக்கும்.
நண்பன் இல்லா வாழ்க்கை துயரில் பங்கு கொள்ள ஆள் இல்லாத சாவு.
பொய்யான நண்பர்களைவிட தெரிந்த பகைவன் மேல்.
துரதிருச்டம் நட்பைப் பகையாக்கும். நண்பர்களுக்கு இடையில் பொதுவுடைமை.
நண்பன் உதவி கேட்டால் நாளை என்பது இல்லை.
அறிமுகம் உடையோர் பலராயினும் உற்ற நண்பர் சிலரே வேண்டும்.
நண்பனைப் பகைவனாகி விடுவானோ என்பது போல் நடத்து.
உண்மையான நண்பனே உன்னதச் சொத்து. அடிக்கடி நீர் வார்க்க வேண்டிய பயிரே நட்பு.
நட்பு எப்போதும் நன்மை தரும் காதல் சில நேரம் துன்பம் தரும்.
நிழல் தரும் மரமே நட்பு.
நட்பைச் சந்தையில் வாங்க முடியாது.
நட்பு மகிழ்ச்சியைப் பெருக்கும் துயரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும்.
நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கின் அவர் பெருமை நொய்தாகும்.
நண்பனுக்காகத் துயர்பட்டால் இரட்டிக்கும் நட்பு.
பெரியோர் கேண்மை வலிமை சேர்க்கும்.
உண்மை நட்பிற்கு அழிவில்லை.
திடீர் நட்பு தீரா வருத்தம்.
