நகரப் படலம் - 166
அயோத்தி நகரில் கல்வியும் செல்வமும் சிறந்தவாறு
166.
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின். கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இலை;
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.
கல்லாது நிற்பார் பிரர் இன்மையின்- நல்ல கலை நூல்களைப்
படிக்காது நிற்பவர்களாகிய வீணர்கள் இல்லாமையாலே; கல்வி முற்ற
வல்லாரும் இல்லை- கல்வியில் முற்றும் வல்லவர் என்று அங்கு
எவரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை- அக் கல்வித்
துறைகளில் வல்லவரும். அஃது இல்லாதவரும் இல்லை; எல்லோரும்
எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே- அந்நகரில் வாழ்பவர்கள்
எல்லோரும் கல்வி. பொருள் ஆகிய எல்லாச் செல்வமும்
அடைந்திருப்பதாலே; இல்லரும் இல்லை உடையார்களும் இல்லை-
அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை. உடையவர்களும் இல்லை.
இப்பாடல் அந்நகரத்தவரின் அறிவுப் பெருக்கத்தையும். செல்வச்
சிறப்பினையும் தெரிவிக்கிறது. கல்லாத வீணரைப் ‘பிறர்’ என்றார்.
அங்குக் கற்றவர்-கல்லாதவர் என்ற வேறுபாட்டையோ. செல்வர்.
வறியவர் என்ற வேறுபாட்டையோ காண இயலாது என்பது கருத்து. 74
