தொலைதூரப் பயணம்
1. "வேற வழியில்லை... உங்களுக்கு ஆபரேஷன் செஞ்சே ஆகணும்...!"
"எனக்கு முன்னமே தெரியும் டாக்டர்... ஜோசியர் கூட, "தொலைதூரப் பயணம்" இருக்கும்னு சொல்லியிருக்கார்!"
2. "அந்த ஆள் உண்மையிலயே ராணுவத்துல இருந்தாரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு..."
"ஏன்?"
"துப்பாக்கி சுடறேன்னு சொல்லி, துப்பாக்கியை நெருப்புல போடறாரே...!"
3. "சர்வர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனது தப்பாப் போச்சு!"
"ஏன்..?"
"பந்தியில சாப்பிட்டவங்ககிட்டே எல்லாம் டிப்ஸ் கேக்கறார்...!""
4. "மன்னா, ஏன் திருமணம் வேண்டாம் என்கிறீர்கள்?"
"கால்கட்டு போட்டுவிட்டால் எப்படி அமைச்சரே போர் சமயத்தில் ஓடுவது?"
5. "சின்ன வீட்டை கொலை பண்ண முயற்சி செய்தாயாமே...ஏன்?"
"மோகத்தை கொன்று விடுன்னு ஒரு சாமியார் சொன்னார்"
