மன்னரின் வீக்னஸ்

bookmark

1. "சர்வர், இந்த மோசமான சாப்பாட்டை யார் சாப்பிடுவா? கூப்பிடு உங்க மேனேஜரை..." 

"அவரும் சாப்பிட மாட்டார் சார்!"

2. "நாலுவித மருந்து சாப்பிட்டும் வயித்து வலி நிக்கலை டாக்டர்..."

"அது என்னங்க நாலுவித மருந்து...?"

"போலி மருந்து, காலாவதியான மருந்து, கலப்பட மருந்து, நிஜ மருந்து"

3. "தலைவரு வெளியில போகும்போது ஏன், "செட்டப்"பையே கூட்டிக்கிட்டு போறாரு?"

"கேட்டா... "வீடு வரை மனைவின்னுதான் பெரியவங்க சொல்லியிருக்காங்க..."ன்னு விளக்கம் தர்றாரே!"

4. "மன்னரின் வீக்னஸ் அண்டை நாட்டு மன்னருக்கும் தெரிந்துள்ளது என்று எப்படிச் சொல்கிறீர்....?"

"சிட்டுக்குருவியிடம் ஒலை கொடுத்து அனுப்பியிருக்கிறானே...!"

5. "நம்ம தலைவர் அநியாயத்துக்கு பிரியாணி பிரியரா இருக்காரு..."

"எப்படி...?"

"மாற்றுக் கட்சிக்காரங்க வச்ச பிரியாணி விருந்துல, மாறுவேஷத்துல போய் சாப்பிட்டுட்டு வந்திருக்காரு!"

6. "ஏன் அடிக்கடி ஜெயிலுக்கு வர்ற?"

"வாரத்துல ஒரு நாளாவது கறி சாப்பிடாம என்னால இருக்க முடியல..."