தைலம் ஆட்டு படலம் - 1997
1997.
‘வேள்விச் செல்வம் துய்த்திகொல்?
மெய்ம்மைத்துணை இன்மை
சூழ்வின் செல்வம் துய்த்திகொல்?
தோலா மனு நூலின்
வாழ்வின் செல்வம் துய்த்திகொல்
மன்?’ என்றனள் - வானோர்
கேள்விச் செல்வம் துய்க்க
வயிற்று ஓர் கிளை தந்தாள்.
வானோர் - தேவர்கள்; கேள்விச் செல்வம் - இராமன் புகழ்
கேட்டல்ஆகிய செல்வத்தை; துய்க்க - அனுபவிக்க; வயிற்று ஓர்கிளை
தந்தாள் - தன்வயிற்றிலிருந்து ஒப்பற்ற புதல்வனைத் தந்தவளாகிய
கோசலை (தயரதனை நோக்கி); ‘வேள்விச் செல்வம் துய்த்தி கொல்? -
முன் செய்த வேள்களின் பயனை துய்த்திகொல் -அனுபவிக்சச் சென்றாயோ;
மெய்ம்மை - சத்தியம் என்கிற; துணை இன்மை -தனக்குச் சமானம்
இல்லாத; சூழ்வின் செல்வம் - ஒன்றை உறுதி யாகப் பற்றிய உன்
ஆலோசனையின் பயனை; துய்த்திகொல் - அனுபவிக்கச் சென்றாயோ;
தோலா -தோல்வி அடையாத; மனு நூலின் வாழ்வின் செல்வம் - மனு
முறைப்படி அரச வாழ்வுநடத்தியதால் ஆகிய பயனை; துய்த்திகொல்’-
அனுபவிக்கச் சென்றாயோ; என்றனள் -
கேள்வி - கேட்டற்குரிய புகழ். ‘தீங்கவி செவிகள்ஆரத் தேவரும்
பருகச் செய்தான்’ (32)என்ற கருத்து இங்கு நினையத் தக்கது. கிளை -
உறவு கோசலைக்கு உறவாவது புதல்வன் என்பதே. வேள்வி, சத்தியம்,
செங்கோன்மை இவற்றைக் காத்தொழுகிய தசரதன் இவற்றின் பயனை
அனுபவிக்கச் சென்றானோ என்றாள். ‘கொல்’ ஐயவினா. ‘மன்’
கழிவுப்பொருள்; அவன் இப்போது இல்லாமையின் கழிந்தது கழிந்தது
என்னும் பொருளில் வந்தது.இடைச்சொல். 68
