திரு அவதாரப் படலம் - 309

bookmark

பரதனும் சத்துருக்கனும்

309.

பரதனும் இளவலும். ஒருநொடி பகிராது.
இரதமும் இவுளியும் இவரினும். மறைநூல்
உரைதரு பொழுதினும். ஒழிகிலர்; எனை ஆள்
வரதனும் இளவலும் என மருவினரே.
 
பரதனும் இளவலும் ஒரு நொடி பகிராது-பரதனும். சத்துருக்கனும்.
ஒரு  நொடிப்பொழுதேனும் பிரியாது; இரதமும் இவுழியம் இவரினும்-
தேரிலும்.  குதிரையின்  மீதும்  ஏறிச் சவாரி செய்யும் போதும்;  மறை
நூல்  உரைதரு  பொழுதினும் -வேதம் முதலிய நூலக்ளை ஓதுகின்ற
காலத்தினும்;  ஒழிகிலர்  -பிரியாதவர்களாகி;  எனை ஆள் வரதனும்
இளவலும்  என  -  என்னை  ஆட்கொண்டருளிய  ராமபிரானையும்.
இலக்குவனையும் போல; மருவினர் - சேர்ந்திருந்தனர்.

நொடி:     கை  நொடிப்  பொழுது.   இதனை  மாத்திரை என்பர்.
தொழிலாகு  பெயராய்.  கால  அளவை  உணர்த்தி  நின்றது. இவர்தல்:
ஏறுதல்.  உரைதருதல்:  ஓதுதல்.  ஒழிகிலர்: முற்றெச்சம்.  ஆள்வரதன்:
வினைத்தொகை.  வரதன்: வரம் தரவல்லன். இவுளி: குதிரை.  பகிராது:
பிரியாது.

பரதனும்.     சத்துருக்கனும் தேரேறிச் சென்றாலும். குதிரைச் சவாரி
செய்தாலும்  வேதம்   முதலான   கலைகளை ஓதினாலும் ஒரு நொடிப்
பொழுதும்  பிரியாதவராகி   இராமனையும்.   இலக்குவனையும் போலச்
சேர்ந்திருந்தனர்  என்பது  கருத்து.   பரத.  சத்துருக்கனரின் ஒட்டுறவு
கூறப்பட்டது.                                             128