திரு அவதாரப் படலம் - 260
தசரதன் புதல்வனில்லாக் குறையைப்
போக்க வேண்டுதல் (260-261)
261.
எனக் கலை மா முகச்
சிருங்கன் இவ் உரை
தனைச் சொலத், தரணிபர்க்கு
அரசன் தான் மகிழ்ந்து,
அனைத்து உலகு உயிரொடும்
அறங்கள் உய்யத், தன்
மனத் துயர் அகன்றிட,
வணங்கிக் கூறுவான்.
