திரு அவதாரப் படலம் - 227
227.
‘என்று எழுந்து. அரு மறை முனிவர் யாரொடும்
சென்று. இரண்டு ஓசனை சேனை சூழ்சேர.
மன்றல் அம் குழலியர் நடுவண். மா தவக்
குன்றினை எதிர்ந்தனன் - குவவுத் தோளினான்.
என்று குவவுத் தோளினான் - என்று நினைத்த. திரண்ட
தோள்களை உடைய அந்த மன்னன் (உரோமபதன்); சேனை சூழ்தர
எழுந்து - நாற்பெரும் படையும் தன்னைச் சூழ்ந்து வர எழுந்து
(புறப்பட்டு); அருமறை முனிவர் யாரொடும் - அரிய வேதங்களைக்
கற்ற முனிவருடன்; இரண்டு யோசனை சென்று - இரண்டு யோசனை
தூரம் எதிர் சென்று; மன்றல் அம் குழலியர் நடுவண் - மணமும்
அழகும் உடைய கூந்தலை உடையவர்களான பெண்களின் நடுவே;
மாதவக் குன்றினை எதிர்ந்தனன் - சிறந்த தவமலை போன்றவளாகிய
கலைக் கோட்டு முனிவனைக் கண்டான்.
அருமறை: அரிய வேதம்; சூழ்தர- சுற்றிலும் வர. மாதவக் குன்று:
உருவகம். நிலையில் திரியாது அடங்கியவனாதலின் ‘மலை’ என்றார்.
மாதவக் குன்று வர. மழை பொழிந்தது அதனால் மனம் மகிழ்ந்த
மன்னனை. “குவவுத் தோளினான்” என்றதன் நயம் உணரத்தக்கது.
மன்றல்: மணம். குழலினர்: கூந்தலை உடையவர்கள். யாரொடும்:
யாவருடனும். 48
