திரு அவதாரப் படலம் - 197

bookmark

197.    

‘எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார்.
பொங்கு மூஉலகையும் புடைத்து அழித்தனர்;
செங் கண் நாயக! இனி தீர்த்தல்; இல்லையேல்.
நுங்குவர் உலகை. ஓர் நொடியில் என்றனர்.
 
எங்கள்   நீள்வரங்களால் - எங்களுடைய  மிகுந்த  வரபலத்தால்;
அரக்கர்   என்றுளார்  பொங்கு  மூவுலகையும் புடைத்தழித்தனர்-
அரக்கர்       என்னும்       ‘கொடியவர்கள்       வளர்ந்தோங்கிய
மூவுலகத்துயிர்களையும்.  பொருது  கொன்றனர்; செங்கண்மால் நாயக-
அழகியகண்களையுடைய  தலைவனே!; இனித்தீர்த்தல் இல்லையேல்-
இனி. இவ்வரக்கர்களின் கொடிய  செயலைத் தீர்க்கவில்லையானால்; ஓர்
நொடியில்  உலகை  நுங்குவே  என்றனர்- வெகுவிரைவில் உலகம்
முழுவதையும் அழித்துவிடுவர் என்றார்கள்.

நீள்வரம்:  நீண்ட வாழ்வையும். நிறைந்த வலிமையையும்  தரும்வரம்
என்பது  பொருள்  (பிரமனும்.  சிவனுமாகிய தேவர்கள்  கொடுத்தவரம்)
என்பதால்   ‘எங்கள்   நீள்வரம்’   என்றனர்   புடைத்து   அழித்தல்:
அடித்துக்   கொல்லுதல்.   நுங்குதல்:   விழுங்குதல்   என்பதும்  ஒரு
பொருளாம்.                                               18