திரு அவதாரப் படலம் - 191

bookmark

191.

கரு முகில் தாமரைல் காடு பூத்து. நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி. ஏந்து அலர்த்
திருவொடும் பொலிய. ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவதுபோல். கழலுன்மேல் வந்து தோன்றினான
 
கருமுகில்-  ஒரு  கருமைநிறமான  மேகம்;  தாமரைக்காடு பூத்து-
தாமரை  மலர்த்  தொகுதியை  மலர்த்திக் கொண்டும்;  நீடு இரு சுடர்
இருபுறத்தேந்தி-   நீண்ட   இரு   சுடர்களை   இருபுறத்தும்  ஏந்திக்
கொண்டும்;    ஓர்   செம்பொன்   குன்றின்மேல்  வருவதுபோல்-
செம்பொன்னால் ஆகியதொரு மலைமேல்  ஏறிவருவதைப்போல; ஏந்து
அலர்த்   திருவொடும்-   மலர்ந்த   தாமரையில்   அமர்ந்திருக்கும்
இலக்குமியோடும்;   பொலிய   கழலுன்மேல் வந்து தோன்றினான்-
அம்மேரு மண்டபம் பொலிய கருடன்மீது வந்து காட்சி தந்தான்.

கை.   கால். வாய் ஆகிய அனைத்தும் தாமரை  போல இருப்பதால்
‘தாமரைக்காடு  பூத்து’  என்றார்.  கருமுகில்  திருமாலையும்.  தாமரைக்
காடு கை.கால். கண். வாய் போன்ற திருமாலின் அங்கங்களையும்.  இரு
சுடர்.  சங்கு. சக்கரங்களையும். செம்பொற்குன்று  கருடனையும்  குறித்து
நின்ற உவமை  ஆகுபெயர்களாம்.  கழலுன்:  கருடன். பொலிதல்:  திரு
வொடும் பொலிதல் அல்லதுமண்டபம்   பொலிதல்    என்னும் பொருள்
உடையதாகும்.  “தோன்றினான்”  என்பதால்  வேறோர்  இடத்திலிருந்து
வராது. அம் மண்டபத்திருந்தே யாவரும் காணத்  தோன்றினான்  என்ற
கருத்துடையதாகும்.     எங்கும்   எப்போதும்    தோன்றி   மறையும்
தன்மையன் எம்பிரான் என்பது கருத்து.                         12