தாடகை வதைப் படலம் - 403
திருமாலுக்கும் இந்திரனுக்கும் தீமையா
விளைந்தது? எனல்
403.
‘ஆதலால். அரிக்கு. ஆகண்டலன்தனக்கு.
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால். இடை
ஏதம் என்பன எய்தியவோ? சொலாய்-
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்!’
அரி- திருமால்; ஆகண்டலன் - இந்திரன்; கீர்த்தி - புகழ்; ஏதம்
- குற்றம்; சொலாய் - சொல்லாய்; தாது - மகரந்தம்; அடர்ந்து -
செறிந்து; தயங்கிய - விளங்கிய; தார் - மாலை. 39-4
