தாடகை வதைப் படலம் - 402

bookmark

இந்திரன் குமதியைக் கொன்ற வரலாறு கூறுதல்

402.    

“வானகத்தினில். மண்ணினில். மன்னுயிர்
போனகம் தனக்கு” என்று எணும் புந்திய
தானவள் குமுதிப் பெயராள்தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்கோன்.
 
போனகம்- உணவு; எணும்  -  எண்ணும்;  புந்தி - மனம்; ஊன்
ஒழித்தல் - கொல்லுதல்; வச்சிரத்து உம்பர்கோன் - இந்திரன்.  39-3