தாடகை வதைப் படலம் - 399

bookmark

ஆடவர்க்கும் தாடகைக்கும் வேறுபாடின்றெனல்

399.

‘இந்திரன் இடைந்தான்; உடைந்து ஓடினார்.
தந்திரம் படத் தானவர். வானவர்;
மந்தரம் இவள் தோள்எனின். மைந்தரோடு.
அந்தரம் இனி யாதுகொல். ஆண்மையே?
 
இந்திரன்   இடைந்தான் -  இந்திரன்  இவளுடன்   எதிர்க்கவந்து
பின்னிட்டு    ஓடினான்;   தானவர்   வானவர்   -   அரக்கர்களும்
தேவர்களும்;  தந்திரம்பட  உடைந்து  ஓடினர்  -  தமது சேனைகள்
அழிய. சிதறி  ஓடிவிட்டார்கள்;  இவள்  தோள்  மந்திரம் எனின் -
இவளது   தோள்கள்  மந்தர  மலை போன்றது என்றால்; மைந்தரோடு
ஆண்மை  இனி அந்தரம்யாது  - தக்க ஆண்களோடு  ஆண்மையில்
என்ன பேதம் இருக்கிறது?

இடைந்தான்:     பின்னிட்டான் (பின்வாங்கினான்). உடைந்து: சிதறி.
தந்திரம்:   படை.  பட:  அழிய.  மந்திரம்:  மந்தரமாலை.    மைந்தர்:
வலிமையுடை  ஆண்கள்.  அந்தரம்: வேறுபாடு (பேதம்).  பெண்ணாகிய
இவளுக்கும். வலிமைமிக்க ஆண்களுக்கும்  என்ன   வேறுபாடிருக்கிறது?
இந்திரன்  முதலானோரும் தோற்று ஓடும்படி  செய்த  இவளைப் பெண்
என நினைக்கலாமா.                                         40