தாடகை வதைப் படலம் - 400
விசுவாமித்திரர் மேலும் சில கூறுதல்
400.
‘மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்.
முன் ஒர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது’
என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான்.
மன்னர் மன்னவன்- தயரதன்; மற்றும் ஒன்று - இன்னும் ஒன்று;
உரைக்கின்றது - சொல்லுவது; ஓதல் - கூறுதல்; ஈறுஇலான் -
முடிவில்லாதவன். 39-1
