தாடகை வதைப் படலம் - 377
கணவன் இறந்தமை கேட்டுத் தாடகை
மக்கேளாடு அகத்தியராச்சிரமம் அடைதல்
377.
‘மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொற்றொடி கேட்டு. வெங் கனலின் பொங்குறா.
‘முற்றுற முடிக்குவென் முனியை’ என்று எழா.
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள்.
விளிந்தமை - இறந்ததனை; பொற்றொடி - பொன் வளையல்
அணிந்த தாடகை; கனல் - தீ; பொங்குறா - பொங்கி; முற்றுற -
அடியோடு (முழுதும்); எழா - எழுந்து; நற்றவன் - அகத்தியன்;
நண்ணினான் - அடைந்தான். 20-12
