தாடகை வதைப் படலம் - 376

bookmark

அகத்தியர் விழிக்கச் சுந்தன் சாம்பராதல்

376.    

‘விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை. கலை. இரலையை உயிர் உண்டு. ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப. மா தவன்
தழல் எழ விழித்தனன்; சாம்பல் ஆயினான்.
 
விழைவு - விருப்பம்; உழை - பசு (மானுமாம்); கலை - கலைமான்;
இரலை  -  புல்வாய்;  வழை  - சுரபுன்னை; மரன் - மரம்; மடிப்ப -
அழிக்க;  தழல்  -  நெருப்பு;  என  -  என்னும்படி;  விழித்தனன் -
விழித்தான்.                                          20-11