தாடகை வதைப் படலம் - 368
சுகேது தவஞ் செய்தது
368.
‘அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்.
மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும்
நல் நெடு முதல்வனை வழுத்தி. நல் தவம்
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான்.
அன்னவன்- அந்த சுகேது; மகவு - குழந்தை; இலாது - இல்லாது;
வைகுறும் - தங்கும்; முதல்வன் - பிரமன்; வழுத்தி - வணங்கி;
பல்நெடும் பகல் - பல நாட்கள்; பயின்ற - செய்த; பான்மை -
தன்மை. 20-3
