தாடகை வதைப் படலம் - 369
பிரமன் வரமளித்தல்
369.
‘முந்தினன் அரு மறைக்
கிழவன். “முற்றும் நின்
சிந்தனை என்?” என.
“சிறுவர் இன்மையால்
நொந்தனென்; அருள்க” என.
“நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இல்லை; ஒரு மகள்
உண்டாம்” என்றாள்.
முந்தினன் - முன் வந்தான்; அருமறை - அரிய மறை; கிழவன் -
தலைவன்; சிந்தனை - எண்ணம்; நுணங்கு கேள்வி - நுட்பமான
கேள்வியறிவு. 20-4
