தாடகை வதைப் படலம் - 367
சுகேதுவின் வரலாறு (367-371)
367.
‘இயக்கர்தம் குலத்துளான்.
உலகம் எங்கணும்
வியக்குறும் மொய்ம்பினான்.
எரியின் வெம்மையான்.
மயங்கு இல் சற்சரன். எனும்
வலத்தினான். அருள்
துயக்கு இலன் சுகேது என்று
உளன் ஒர் தூய்மையான்.
இயக்கர் - கந்தருவர்; மொய்ம்பு - வலிமை; வியக்குறும் -
வியப்படையும்; வெம்மை - வெப்பம்; துயக்கு - குற்றம் (சற்சரன்
மகன் சுகேதுவாம்). 20-2
