தாடகை வதைப் படலம் - 366
தாடகை வரலாறு கூறுதல்
7 தாடகை வதைப் படலம்
366.
‘கல் நவில் தோளினாய்! கமலத்தோன் அருள்
மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து.
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்:
கல்நவில் தோள்- கல்லையும் வென்ற தோள்; கமலத்தோன் -
பிரமன்; வாய் மடுத்து - வாயில் பெய்து; கூற்றம் - எமன்; அறைய -
கூற. 20-1
