தாடகை வதைப் படலம் - 365

bookmark

365.

‘சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்; கண்ணின் காண்பரேல்.
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
‘’தாடகை’’ என்பது அச் சழக்கி நாமமே;*
 
ஆடவர்   கண்ணில்  காண்பரேல்  பெண்மையை   அவாவும்
தோளினாய்     -     ஆண்களும்    உன்னைக்     காண்பாராயின்
பெண்தன்மையை   விரும்பத்  தகுந்த தோளாற்றலுடையவனே;  சூடகம்
அரவு  உறழ்   சூலம்   கையினள்  -  கையணியாகப்  பாம்புகளை
உடையவள்  சூலம்  உடையவள்;   காடு  உறை  வாழ்க்கையள்  -
இவ்வனத்தில்  வாழும்  வாழ்க்கை  உடையவள்;  அச் சழக்கி  நாமம்
தாடகை  என்பது  -  இத்தகைய  இக்கொடியவளது  பெயர்  தாடகை
என்பதாம்.

சூடகம்:   கையில்  அணியும்அணி   (வளையல்).  அரவு:   பாம்பு.
சூடகமாக   அரவுறழ்  கை:  சூலக்கை  எனக்கூட்டி   உரை  காண்பர்
கையணியாக நாகங்களை அணிந்திருக்கிறாள். சூலம்   ஏந்தியிருக்கிறாள்
என்பது   பொருள்.   உறை  வாழ்க்கை:  வினைத்தொகை.   ராமனது
தோளாற்றல்  கண்ட  ஆண்களும். பெண்மையை அவாவுவர்  என்றார்.
அவாவுதல்: விரும்புதல். சழக்கி: கொடியவள். நாமம்:  பெயர்.  கண்டார்
விரும்பும்  தோளாற்றல்  உடையவன் என்பதால் உலகுயிர்கள்.  ஆண்.
பெண்    அடங்க   அனைத்தும்   பெண்   தன்மையே    என்பதும்
கருத்தாம்.                                               24