தமிழ் சித்தர்களின் அண்டவியல் கோட்பாடுகளும் அறிவியல் ஞானமும்
குறும்பர்களிடம் இருந்து தப்பி காட்டிற்குள் புகுந்த பண்டைகால காஞ்சியின் மன்னர் தொண்டைமான் இளந்திரையன், ரோமசர் என்ற சித்தரிடமிருந்து அண்டவியல் உபதேசம் பெற்றதாக ரோமசர் பற்றிய நூல்கள் கூறுகின்றன. அந்த உபதேசத்தின் சுருக்கம் பின்வருமாறு
உபதேச சுருக்கம்
இந்த உபதேசத்தில் அவர் பூமியின் வயது, சூர்ய குடும்ப தோற்ற மறைவு, அண்டத்தின் வயது (அதாவது ஆயுள்), அண்டவியல் அலகுகள் போன்றவற்றை குறிப்பிடுகிறார். மேலும், ரோமசர் கூறுகையில் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போதும் தன் உடலில் இருந்து ஒரு முடி உதிர்வதாகவும், தற்போது அவர் 71 பிரம்மாக்களை பார்த்துள்ளதால் 71 முடிகள் உதிர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
பூமியின் வயது
பூமியின் வயதை கணக்கிட 432 ஐ 10 லட்சத்தால் பெருக்க வேண்டும் என்கிறார். அதாவது பூமியின் வயது 432 கோடியே 10 லட்சம் ஆண்டுகள் என்கிறார்.
விஞ்ஞானம்
இன்றைய விஞ்ஞானம் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என கணிக்கிறது.
சூர்ய குடும்ப ஆயுள்
பிரம்மாவின் ஒரு நாளே சூர்ய குடும்ப ஆயுள் என்கிறார். அதாவது சூர்ய குடும்ப ஆயுள் 864 கோடி ஆண்டுகள் என்கிறார். பிரம்மாவின் ஒரு நாள் முடியும் போது 14 லோகங்களில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டுமே அழியும் என்றும், மற்ற 11 லோகங்கள் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போது அழியும் என்கிறார்.
விஞ்ஞானம்
இன்றைய விஞ்ஞானம் சூர்ய குடும்ப ஆயுள் 900 கோடி ஆண்டுகள் என கணிக்கிறது
அண்டம்
இந்த அண்டத்தின் வயது 155 லட்சத்தி 52 ஆயிரம் கோடி ஆண்டுகள் (பிரம்மாவின் 51ஆம் ஆண்டு துவக்கம்) என்கிறார்.
அதைப்போல் அண்டத்தின் ஆயுள் 311 லட்சத்தி 4 ஆயிரம் கோடி ஆண்டுகள் (பிரம்மாவின் ஆயுள்) என்கிறார்.
விஞ்ஞானம்
இன்றைய விஞ்ஞானம் அண்டத்தின் வயது 1300 கோடி ஆண்டுகளுக்கு மேல் என கணிக்கிறது.
அகிலாண்டம்
சூரபதுமன் (கந்த புராணம்) என்ற அவுன தேச அரக்கன், 1008 அண்டங்களை ஆளும் வரத்தை சிவனிடமிருந்து பெற்றதாக கூறுகிறார்.
விஞ்ஞானம்
இன்றைய விஞ்ஞானம் இதை போன்ற பல்லண்டங்களை மல்டிவெர்சு (multiverse) என கூறுகிறது.
பழனியில் தமிழர் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பு
பழநியின் பெருங்கல் சவுக்கை என்பது பழநியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பாகும். இந்த பெருங்கல் அமைப்புகள் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள பழனியிலும், இங்கிலாந்து நாட்டின் கோர்ன்வால் மாகாணத்திலும், இத்தாலியிலும் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலுள்ள சவுக்கையிலும் சில மாறுபாடுகள் காணப்பட்டாலும் கல்லின் நடுவிலோ கல்லமைப்பின் நடுவிலோ ஒரு வட்டப்பொந்து அனைத்து சவுக்கைகளிலும் காணப்படுகிறது.
பழனியில் தமிழர் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பு
பழநியின் பெருங்கல் சவுக்கை என்பது பழநியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பாகும் (இதனைக் கீழ்க்கண்ட படத்தில் காணலாம்). இந்த பெருங்கல் அமைப்புகள் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள பழனியிலும், இங்கிலாந்து நாட்டின் கோர்ன்வால் மாகாணத்திலும், இத்தாலியிலும் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலுள்ள சவுக்கையிலும் சில மாறுபாடுகள் காணப்பட்டாலும் கல்லின் நடுவிலோ கல்லமைப்பின் நடுவிலோ ஒரு வட்டப்பொந்து அனைத்து சவுக்கைகளிலும் காணப்படுகிறது.
பழனி அருகே ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில் இந்த சவுக்கை உள்ளது. இந்த சவுக்கையின் படி ஒரு ஆண்டின் ஆரம்பத்தையும் அரைப்பகுதியையும் முடிவையும் எளிமையாக கணித்தனர் (பழங்காலத்து தமிழ் மக்கள்). சூரியன் வடக்கில் இருந்து தெற்காக செல்லும் 6 மாத கால பயணத்தை தெற்கு நோக்கிய காலம் என்றும் தெற்கில் இருந்து வடக்காக செல்லும் 6 மாத கால பயணத்தை வடக்கு நோக்கிய காலம் என்றும் கூறுவர். அதன்படி கி.பி. 2013 ஆம் ஆண்டின் தெற்கு நோக்கிய காலம் ஆடி ஒன்றாம் தேதி தொடங்கியது. சூரியனின் ஒளி தெற்கு நோக்கிய நகர்வு பாதையை தொடங்கும் காலத்தில் இந்த சவுக்கையில் உள்ள பொந்தின் வழியாக சூரிய ஒளி ஊடுருவும். அதன்படி இச்சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக சூரிய ஒளிக் கதிர்கள் தென்மேற்காக ஊடுருவியதை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர். பழனியில் உள்ள சவுக்கை மூன்று கற்களை ஆய்த எழுத்து போல் அமைத்தது போன்ற தோற்றத்தில் உள்ளது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள சவுக்கையின் அமைப்பு வேறுபட்டு காணப்படுகிறது.
மயனின் அண்டவியல் கோட்பாடுகள்:-
மயனின் அண்டவியல் என்பது குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் என்பவரின் ஐந்திரம் மற்றும் பிரணவ வேதம் போன்ற நூல்களில் இருந்து பெறப்பட்ட 31 கொள்கைகளை கொண்ட ஒரு அறிவியல் முறையாகும். இம்மயனின் நூல்கள் கணபதி என்னும் சிற்ப கலைஞரால் மீளுருவாக்கப்பட்டன.
31 கொள்கைகள்
மூலம்: மயன் பல்கலைக்கழக வலைதளம்
1. பரவெளியில் எப்பொருளும் படைக்கப்படவில்லை. அனைத்தும் ஒரு மூலப்பொருளின் தோற்ற வெளிப்பாடே.
2. அம்மூல சக்தியே சில நேரங்களில் ஆதிமூலம் எனவும், பிரம்மன் (குவையப் புலக்கோட்பாடு) எனவும் அழைக்கப்படுகிறது.
3. இம்மூல சக்தியே தன்னை வெளிப்படு தோற்ற இயல்புக்கேற்ப அழகாக தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறது. இச்சக்தி தான் வெளிப்படும் இடம், தோற்றம், காரணம் மற்றும் இயல்புக்கேற்ப தன்னை வெவ்வேறு பொருட்களாக வெளிப்படுத்திக் கொள்கிறது.
4. இந்தத் தோற்ற ஆதாரமே மூலமென்றும், மையமென்றும், புள்ளியென்றும் அறியப்படுகிறது.
5. இயற்கையில் உள்ள பொருட்கள் அனைத்தும் சக்தியும் பொருட்களும் ஒன்றிணைந்த தோற்றமே.
6. கட்டற்ற அண்டவெளி என்பது சக்தியும் பொருளும் இணைந்த களத்தோற்றமாகவும், அண்டத்திலுள்ள அனைத்து பொருட்களுக்கும் மூலமாய் அமைகிறது.
7. ஒம் என்ற பிரணவமே பார்வையில் ஒளியாகவும், செவிப்புலன்களில் ஒலியாகவும் பரிணமிக்கிறது.
8. இவ்வண்டத்தின் பொருள் தோற்றம் அனைத்தும் இசையின் தோற்றமாகவோ, மாதிரியாகவோ, உருவமாகவோ அல்லது இசையின் அளவுகோளில் உள்ள வேறு வெளிப்பாடுகளினாலோ ஆனவை.
9. காலமே தான் படைத்தவற்றை ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறது.
10. உருவமற்ற பிரம்மத்தின் முதல் தோற்ற வெளிப்பாடு சதுரமாகும்.
11. இந்த ஆதி சதுர தோற்றமே உள்ளார்ந்த ஆற்றலின் வரைபடமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதையே வாஸ்து புருச மண்டலம் என்கின்றனர்.
12. பரவெளி கனசதுர அணுசக்திகளால் ஆனது. அவையே இவ்வண்டத்தின் கட்டடக்கண்டமாகும்.
13. அந்த கனசதுரமே சிற்றவை (சிற்றம்பலம்) எனப்படும்.
14. இச்சிற்றவையில் உள்ள செங்குத்தான ஒளிவீசும் பகுதியே ஒளி நூல் ஆகும். இதையே வடமொழியில் பிரம்மசூத்திரம் என்கின்றனர்.
15. இவ்வொளிநூலே மூலத்தூண் எனவும் மூலஸ்தம்பம் எனவும் கொள்ளப்படுகிறது.
16. இவ்வொளி நூல் ஒரு குறிப்பிட்ட தாளத்தில் அதிர்கிறது. இவ்வதிர்வுகளே இயற்கையின் ஒழுங்காக அமைகிறது.
17. இவ்வதிர்வுகளையே சிவ தாண்டவம் இவ்வண்டத்தில் வெளிப்படுத்துகிறது.
18. கனசதுர அணுக்களின் மூலக்கூறான சிற்றாகாசமே விண்வெளியின் கருவாகும்.
19. சிற்றாகாசம் என்பது ஒலிக்கும் ஒளிக்கும் உண்டான கலப்பு எனப்படும்.
20. பரவெளி என்பதே ஒளியாகவும், அவ்வொளியே அண்டப்பொருட்களுக்கு மூலமாகவும் இருக்கிறது. இவ்வொளியை நுண்பொருள் என தமிழிலும் பிரம்மம் என வடமொழியிலும் கூறுகின்றனர்.
21. இந்நுண்பொருளே ஆற்றல் என்னும் பிரம்மமாகவும், இப்பிரம்மமே மூடப்பட்ட வெளிகளில் உயிர் சக்தியாகவும் இருக்கிறது. (இம்மூடப்பட்ட வெளி என்பது உயிரினம், கட்டிடம், அண்டம் என அனைத்து இயங்கு பொருட்களுக்கும் பொருந்தும்)
22. கட்டிடக்கலையே கணக்கியலின் உச்சம்.
23. கட்டற்ற காலத்தின் இயக்கமே கணக்கியலின் மூலம்.
24. பரவெளியின் அதிர்வே காலம்.
25. பரவெளியும் காலமும் ஒன்றே.
26. காலம் என்பது பரவெளியின் ஒரு நுட்பமான வெளிப்பாடு.
27. காலமே அண்டப்பொருட்கள் அனைத்துக்கும் மூலக்கூறு.
28. சிற்றாகாசமே பேராகாசத்தின் முழு அடையாளம்.
29. பரவெளி தன்னை வெளிப்படுத்த ஒவ்வொரு கணமும் துடிக்கிறது.
30. ஒரு சிற்பியானவன் தன் உள்மன சக்தியை கொண்டு ஒம் என்ற பிரணவத்தை சிற்றாகாசத்திலும் பேராகாசத்திலும் ஒலியாகவும் ஒளியாகவும் உணரத்தெரிந்திருக்க வேண்டும்.
31. தன் அகயியக்கத்தை அறியாமல் எவராலும் புறவெளியின் இயக்கத்தை அறிய முடியாது.
என மயன் கொள்கைகள் பண்டைய கால ஆராய்ச்சியின் மூலமாக மேற்கண்டவாறு சொல்லப்படுகிறது.
சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான விண்மீன் குழு பற்றிய ஒரு ஆய்வு :-
வசிஷ்டரும் அருந்ததியும் (Mizar and Alcor) சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான விண்மீன் குழுவாகும். சப்தரிசி மண்டலம் வடக்கு வானில் இரவு நேரத்தில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று. அதன் ஒரு பகுதியான வசிட்டர் விண் மீண் குடும்பத்தில், நான்கு விண்மீன்களும் அருந்ததி விண் மீன் குடும்பத்தில் இரண்டு விண் மீன்களும் உள்ளன.
புராணக் கதை
புராணக் காலத்தில் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் மிகச் சிறந்த பிரம்மரிசிகள் (முனிவர்கள்) ஏழு பேரும் (சப்த ஏழு) வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள். அந்த பிரம்மரிசிகள் கிரது, புலஹ, புலஸ்த்ய, அத்திரி, அங்கிரஸ், வசிட்டர், மரீசி என்பவர் ஆவர். இந்த சப்தரிசி மண்டலத்தில் ஏழு நட்சத்திரத்தில் ஒரு நட்சத்திரத்திற்கு அருகில் எட்டாவதாக இன்னும் ஒரு நட்சத்திரம் உண்டு. அந்த இரண்டு நட்சத்திரங்கள் வசிட்டரும் அவர் மனைவி அருந்ததியும் என்றும் ஐதீகம் உண்டு. ஏனைய ஆறு ரிசிகள் சபலத்தால் ரம்பா, மேனகை, ஊர்வசி போன்ற வான தேவதைகளிடம் நிலை தடுமாறியிருந்தவர்கள். இவர்களின் மனைவிமார்களும் இந்திரனைப் பார்த்து தன்னிலை மறந்தவர்கள். ஆனால் வசிட்டரும், அருந்ததியும் விதிவிலக்கானவர்கள். எனவே அவர்கள் எப்போதும் இணைந்தே இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து வாழ்க்கையில் இணைபிரியாது வாழவேண்டும் என்பதற்காய் திருமணங்களின் போது புதுமணத் தம்பதிகளுக்கு வானில் அருந்ததி பார்த்து ஆசி பெறும் விழுமிய நிகழ்வும் அன்று முதல் இன்று வரையில் நடைபெறுகின்றது.
மேற்கண்டவற்றை நிரூபிக்கும் வானியல் சான்றுகள்:-
வானியலில் வசிட்டர் நட்சத்திரம் மிஸார் எனவும், அருந்ததி அல்கோர் எனவும் அழைக்கப்படுகிறது. வசிட்டரும், அருந்ததியும் இரட்டை நட்சத்திரங்கள் அல்ல. ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனியே இரட்டை நட்சத்திரங்கள். அதிலும் மிஸார் என அழைக்கப்படும் வசிஷ்ட நட்சத்திரம் தான் வானியல் வரலாற்றில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை நட்சத்திரம். 35,000 மில்லியன் மைல்கள் இடைவெளியில் மிஸார் ஏ, மிஸார் பி என்ற இரு நட்சத்திரங்களும் ஒன்றை ஒன்று சுற்றிக் கொள்கின்றன.
சப்தரிசி மண்டலத்தில் உள்ள ஏழு நட்சத்திரங்களும் வெறுபட்ட தன்மையுடையன. துபே, அல்கெய்ட், மிஸார் மேராக், ஃபெக்டா, மெக்ரஸ் வரிசையில் ஒன்றைவிட ஒன்று மங்கலானது. துபே சற்று செம்மஞ்சள் நிறம் கொண்ட 5000 பாகை செல்சியஸ் வெப்ப நிலை கொண்டதாகும். மற்றவை வெண்மை நிறமுடைய 18,000 பாகைக்கும் மேலான வெப்ப நிலை உள்ளவை. சப்தரிசி மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் வெற்வேறான திசைகளில் அதிவேகமாகப் பயணம் செய்கின்றன.
சப்தரிசி மண்டலத்தின் முதல் இரண்டு நட்சத்திரங்களான துபே, மெராக்சையும் இணைக்கும் கற்பனைக்கோடு தற்போதுள்ள துருவ நட்சத்திரமான போலாரிஸ்க்கை காட்டுவதனால் இவற்றை காட்டிகள் என அழைக்கப்படுகின்றது. பூமியின் சுழற்சி அச்சு இதனை நோக்கித் தான் அமைந்துள்ளது. இதனால் மற்ற நட்சத்திரங்கள் பூமியின் நகர்வுக்கு ஏற்ப இடம் மாறினாலும் துருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்கும்.
