டார்ச் லைட்
"இந்த வக்கீல் ஏன் கோர்ட்டுக்கு டார்ச் லைட் எடுத்துகிட்டுப் போறாரு?"
"சட்டம் ஒரு இருட்டறையாச்சே, அதனாலேதான்"
"கரகாட்டக்காரியை மருமகளாக் கொண்டு வந்தது தப்பாப் போச்சு.."
"ஏன்...?"
"ஏதாவது சொன்னா புருஷனைத் தலையில தூக்கி வச்சு ஆடுறா."
"எது எதுக்குத்தான் விளம்பரம் கொடுக்கிறதுங்கற ஒரு முறையே இல்லாமல் போச்சு!"
"எதுக்கு விளம்பரம் கொடுத்திருக்காங்க...?"
"ஒருத்தர் "சின்ன வீடு" வேணுமின்னு விளம்பரம் கொடுத்திருக்கார்...!"
'லாரி'ல கரும்பு ஏத்துனா 'காசு'!
'கரும்பு'ல லாரிய ஏத்துனா ஜூஸூ'!!
"இதெல்லாம் ஒரு ஜோக்குன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்...."
"கபாலிக்கு நேத்தைக்கு பிறந்த நாள் போலிருக்கு ஏட்டய்யா..."
"நேத்து திருடு போன வீட்டுல, பலூன் கட்டி, கேக் வெட்டினதுக்கான எவிடென்ஸ் கிடைச்சிருக்கு...!"
