பீட்ஸா

bookmark

(புயல் மழையில் ஒருவன் பீட்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்)

கடைக்காரர்: சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..?

வந்தவர்: பின்ன! இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க..!??

வக்கீல்: சம்பவம் நடக்கும்போது நீ எந்த மாதிரி உடை அணிந்திருந்தே?

குற்றவாளி: இப்படியெல்லாம் கேப்பீங்கன்னுதான் அதே டிரஸ்ஸை ரெண்டு மாதமா கழட்டாம இருக்கேன்!

"நம்ம ராமசாமி கல்கண்டு புக் வாங்குறதை இப்போ நிறுத்திட்டாரே! ஏன்?"

"இப்ப அவருக்கு சுகர் கூடிருச்சாம்!"

"பாட்டில்லே மருந்து அப்படியே இருக்கே! சாப்பிடல்லியா?"

"பாட்டில் மேலே எழுதியிருந்தபடி செய்தேன் டாக்டர்!"

"என்ன எழுதியிருக்கு?"

"பாட்டிலை இறுக மூடி வைக்கவும்"

"? ? ? ....."

நிருபர்: உங்க பாலிசி என்ன?

தலைவர்: என்கிட்டே பத்து லட்ச ரூபாய்க்கு எல்.ஐ.சி பாலிசி மட்டும்தான் இருக்கு...