ஜேம்ஸ் மாடிசன்

ஜேம்ஸ் மாடிசன்

bookmark

ஜேம்ஸ் மாடிசன் மார்ச் 16, 1751 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது குடியரசுச் தலைவர் ஆவார். இவர் 1809 முதல் 1817 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவர். குறிப்பாக அமெரிக்காவின் 1787 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தினை எழுதியவர்களின் முதன்மையானவர். இதனால் இவரை “அரசியல் நிறுவன சட்டத்தின் தந்தை” என போற்றுவர். இவர் 1788ல் அரசியல் நிறுவன சட்டத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை. 1787-1788 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க அரசு ஒரு நடுவண் அரசாக இயங்குவதற்கு வலு சேர்த்து ஒப்புதல் அளிக்கும் முகமாக எழுதப்பட்ட 85 புகழ்பெற்ற கட்டுரைகளில் மூன்றில் ஒரு பகுதி கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரசின் முதல் தலைவராக இவர் பணியாற்றிய பொழுது பல அடிப்படையான சட்டங்களை நிறைவேற்றினார். அரசியல் நிறுவன சட்டத்தில் உள்ள முதல் பத்து சட்ட மாற்றங்களை நிறைவேற்றினார். அவற்றுள் குடிமக்களின் உரிமைகள் சட்டம் முக்கியமானது. இதனால் இவரை “உரிமைகள் சட்டத்தின் தந்தை” எனப் போற்றுவர். இவர் ஜூன் 28, 1836  ஆம் ஆண்டு மறைந்தார்.