ஜேம்ஸ் மன்ரோ

ஜேம்ஸ் மன்ரோ

bookmark

ஜேம்ஸ் மன்ரோ, ஏப்ரல் 28, 1758 ஆம் ஆண்டு பிறந்தார். அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவரோடு நான்காவது முறையாக வர்ஜீனியாவைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிரான்சுக்கும் பிரித்தனுக்கும் நடந்த போர்களில் ஐக்கிய அமெரிக்கா நடுநிலையாக இருக்க பெரிதும் உழைத்தார். 1812 ஆம் ஆண்டுப் போருக்கு இவர் தம் ஒப்புதல் அளித்து வலுசேர்த்தார். ஜேம்ஸ் மாடிசனுக்குக் கீழ் இவர் போர்க்காலத்துச் செயலாளராகவும் நாட்டுச் செயலாலராகவும் பணி புரிந்தார். இவர் காலத்தில் 1819ல் ஃவிளாரிடாவை ஐக்கிய அமெரிக்கா சேர்த்துக்கொண்டது. 1820 ல் மிசௌரி மாநிலம் அடிமை முறை ஏற்புடைய மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள இடங்களை ஐரோப்பாவின் வல்லரசுகள் குடியாட்சிகளாக்கும் முயற்சிக்கு ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பையும், ஐரோப்பிய வல்லரசுகளின் சண்டைகளில் ஐக்கிய அமெரிக்கா பங்கு கொள்வதில்லை என்றும் இவர் 1823ல் ஒரு கொள்கையை அறிவித்தார். இக் கொள்கைக்கு மன்ரோ கொள்கை என்று பெயர். வெளிநாட்டு உறவுக் கொள்கைகளில் இது ஒரு திருப்புமுனையான கொள்கை. இவர் ஜூலை 4, 1831 இல் காலமானார்.