சோ என்லாய்

சோ என்லாய்

bookmark

சோ என்லாய் (1898-1976) சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமராக 1949 தொடக்கம் முதல் 1976 அவரின் இறப்பு வரை பணியாற்றினார். சீனப் பொதுவுடமைக் கட்சியின் எழுச்சியிலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. மா சே துங்கின் உறுதியான ஆதரவாளராக இருந்தாலும், இவர் ஒரு மிதவாதியாகவும், காரியவாதியாகவும் பார்க்கப்பட்டார். இவரது காலத்தில் தான் எல்லைப் பிரச்சனை காரணமாக இந்தியச் - சீனப் போர் மூண்டது. அதில் சீனா வெற்றி அடைந்தது. அதன் பொருட்டு இவர் பெரிதும் பாராட்டப் பெற்றார். இவரின் இறப்பின் பின் இவரது இணைச் செயற்பாட்டாளர் டங் சியாவுபிங் பிரதமாரானர். இவர் சீனாவின் இறுகிய பொதுவுடமை கொள்கைகளைத் தளர்த்தி, திறந்த சந்தை கொள்கைகளை அறிமுகப்படுத்தி, சீனாவின் பொருளாதர எழுச்சிக்கு வித்திட்டார்.