டங் சியாவுபிங்

டங் சியாவுபிங்

bookmark

டங் சியாவுபிங் ஆகஸ்டு 22, 1904 ஆம் ஆண்டு பிறந்தார். 1978 இல் இருந்து 1990 வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்து தற்கால சீனாவின் பொருளாதார எழுச்சியை ஏதுவாக்கியவர். இவர் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைள் பலவற்றைச் சீனாவுக்குள் அமுல்படுத்தியவர். இவர் முதலில் மா சே துங் ஆதரவாளராகவே இருந்தார் என்றாலும், அவரின் இறப்புக்கு பின்பு சீர்திருத்தவாதியாகவும் காரியவாதியாகவும் இவர் பரிணமித்தார். இவரே ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் ஆட்சி முறைமைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர். இவர் பிப்ரவரி 19, 1997 ஆம் ஆண்டு இறந்தார்.