சொத்து மதிப்பு

bookmark

பியூன்: "சார் மணி ஆறாகுது. வீட்டுக்குப் போகலையா...?"

அதிகாரி: "இன்னிக்கு வருமானம் ஒன்னும் இல்ல... வீட்டுக்குப் போனால் மானம் போகும்...!"

"அந்த டாக்டர் உங்களை ஆறுமாசம் தங்கி வைத்தியம் பார்க்கச் சொல்றாரே...ஏன்?"

"என்னோட சொத்து மதிப்பு இருபது லட்சமுன்னு சொன்னேன்."

"யோவ் ஏட்டு... போன்ல யாரு?"

"எவனோ பெயர் தெரியாத திருடன் சார்... 'கடமையைச் செய்; மாமூலை எதிர்பாராதே'ன்னு அட்வைஸ் பண்றான்!"

"அரசியல் தலைவரோட வேகம் குறைஞ்சு போச்சு..."

"எப்படிச் சொல்றே...?"

"போன வருஷம் மூணு கட்சி தாவினாரு... இந்த வருஷம் ஒண்ணே ஒண்ணுதான்...!"

"அந்த டாக்டர்கிட்ட மட்டும் இவ்வளவு கூட்டம் அலை மோதுதே... அவ்வளவு கைராசிக்காரரா?"

"அங்கதான் சூப்பரான நர்சுகளை வேலைக்கு வைத்துள்ளார்."