ஜனநாயகம்
"இந்த தேர்தல்ல யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு நினைக்கறே..?"
"யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு தெரியாது.. ஆனா யார் தோப்பாங்கன்னு தெரியும்.. ஜனநாயகம் தோற்கும்."
"விபீஷணன் சரணாகதிக்கும்.. தி.மு.க., சரணாகதிக்குமான ஒற்றுமை... வேற்றுமை என்ன..?"
"ஒற்றுமை ஆட்சியை தனதாக்கிக்கொள்ள.. வேற்றுமை.. அநீதியை ஒழிக்க விபீஷணன் சரணாகதி.. நீதியை ஒழிக்க தி.மு.க., சரணாகதி."
"காங்கிரஸ் ஏன் 63 தொகுதிகள் கேட்டங்களாம்...?"
"ஜெ தான் கூட்டுத்தொகை 9 வரமாதிரி கேட்கச் சொன்னாங்களாம்."
"ராமதாஸ் தனக்கு ஒதுக்கிய தொகுதியில் இருந்து ஒரு தொகுதியை எப்படி விட்டுக் கொடுத்தார்."
"ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் கேட்டாப்போல மேலவைல ஒரு சீட் அவர் சொல்றவருக்குத் தரதா கலைஞர் சொல்லி இருப்பார்."
"நாட்டுல எவ்வளவு ஜாதிகள் இருக்கு..."
"ஒரு சீட், இரண்டு சீட் வாங்கின கட்சியெல்லாம் லிஸ்ட் எடுத்துப் பார்.. தெரிஞ்சிடும்."
