சிந்துவெளி திராவிடர் நாகரிகம்
சிந்துவெளி நாகரிகத்தின் அடிப்படையில் அமைந்த திராவிடர் நாகரிகம் கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்றும்" அது "சைத்தவ பண்பாட்டு நாகரிகம்" என்று அழைக்கப்பட்டது என்று பேராசிரியர். கே. ஆர். ஸ்ரீ கண்ட மூர்த்தி குறிப்பிடுகின்றார்.
"சிந்துவெளி நாகரிக இனத்தின் பரம்பரையினர் என்று கருதப்படு கின்றவர்கள், தமிழ்நாட்டில் "திராவிடர்"களில் இன்னும் பிரபலமாக இருக்கின்ற "சித்த வைத்திய முறை"யைப் பின்பற்றுகிறவர்கள் என்றும், இவர்களே, "சைத்தவ நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள்" என்றும் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்" எனப் பேராசிரியர் எஸ். கே. இராமச்சந்திரராவ் தெரிவிக்கின்றார்.
இதனைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஆயுர்வேத மருத்துவ முறையை விடவும், இந்திய மருத்துவ முறைகளில் மிகவும் தொன்மையான மருத்துவ முறையாக இருந்து, தொடர்ந்து வந்து கொண்டிருப்பது சித்தமருத்துவ முறை என்பது தெளிவு.
தமிழ் மருத்துவர்களை "ஆயுள்வேதர்" என்று இளங்கோ வடிகள் குறிப்பிடுகிறார். "ஆயுள் வேதமாகிய வைத்திய நூல்கள் தமிழில் அளவிறந்த அளவில் இருக்கின்றன. சித்தர்கள் பதினெண் மரும் ஆயுள் வேத நூல்களை இயற்றியிருக்கின்றனர். அவற்றில் பெரும்பாலானவை இப்போதும் உள்ளன. சமஸ்கிருத மொழியிலும் ஆயுள்வேத நூல்கள் மிகுதியாக இருக்கின்றன. தமிழ் ஆயுள்வேதமும் சமஸ்கிருத ஆயுர்வேதமும் வேறு வேறானவை. தமிழ் ஆயுள் வேத நூல்கள் பலவற்றை இன்றும் தஞ்சை சரசுவதிமகால் நூல்நிலையத்தில் காணலாம் என்று உ.வே. சாமிநாதய்யர் கருத்துத் தெரிவிக்கின்றார்.
1927 வரை சித்த மருத்துவம் என்ற பெயர் இன்மையால்" இன்றைய "தமிழ் மருத்துவம்" "ஆயுள்வேதம்" என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது.
