குலமுறை கிளத்து படலம் - 729

bookmark

பகீரதன்

729.

‘தூ நின்ற சுடர் வேலாய்!
   அனந்தனுக்கும் சொலற்கு அரிதேல்.
யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு
   எளிதோ? ஏடு அவிழ் கொன்றைப்
பூ நின்ற மவுலியையும்
   புக்கு அளைந்த புனற் கங்கை.
வான்நின்று கெணர்ந்தானும்
   இவர் குலத்து ஓர் மன்னவன்காண்!
 
தூநின்ற  சுடர்- (பகைவரின்) தசை படிந்த ஒளிமிக்க;  வேலோய்-
வேலையுடைய மன்னவனே!;  அனந்தனுக்கும் - (ஆயிரம் முகமுடைய)
ஆதிசேடனுக்கும்;     கொலற்கு    அரிது    ஏல் -       (இவர்
களின்     குலப் பெருமையை)  சொல்வது  கடினம்  என்றால்;  யான்
இன்று    -    (ஒரு    முகமும்   ஒரு   நாவும்   உடைய)   நான்
தளர்ச்சியடையாமல்  இப்பொழுது;  புகழ்ந்து உரைத்தற்கு - புகழ்ந்து
சொல்வதற்கு; எளிதோ  -  எளிதாகுமோ?  (ஆகாது); ஏடு அவிழ் -
இதழ் விரியும்; கொன்றைப் பூ நின்ற - கொன்றை மலர்களைச் சூடிய;
மவுலியையும்  -  திருமுடியில்; புக்கு அளைந்த - வந்து பொருந்திய;
புனல் - புனித நீரையுடைய; கங்கை - கங்கை நதியை; வான் நின்று-
வானுலகத்திலிருந்து;  கொணர்ந்தானும் - (இப் பூவுலகிற்குக்) கொண்டு
வந்தவனும்;  இவர் குலத்து - இச் சிறுவர்களது குலத்தில் பிறந்த; ஒர்
மன்னவன் காண் - (பகீரதன் என்னும்) ஓர் அரசனே ஆவான்.     

மவுலியையும் - உயர்வு சிறப்பும்மை.                       9