கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

bookmark

வாழ்க்கை வரலாறுகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.வாழ்க்கைக் குறிப்பு இவர், சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1938 ஆண்டு வெளியான அவருடைய மலரும் மாலையும் தொகுதியில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், 7 கதைப் பாட்டுகள் இடம்பெற்றிருந்தது. தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ள அவரது குழந்தைப் பாடல்களில் ஒன்று. எட்வின் ஆர்னால்டின் ஆசிய ஜோதி யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.1922-இல் மனோன்மணியம் மறுபிறப்பு என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். காந்தளூர்ச்சாலை பற்றிய ஆய்வு நூலை எழுதினார். அழகம்மை ஆசிரிய விருத்தம், ஆசிய ஜோதி , (1941), மலரும் மாலையும், (1938), மருமக்கள்வழி மான்மியம், (1942), கதர் பிறந்த கதை, (1947), உமார் கய்யாம் பாடல்கள், (1945), தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச்செல்வம், கவிமணியின் உரைமணிகள், மருமக்கள்வழி மான்மியம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 4 டிசம்பர் 1940 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை கவிமணி என்ற பட்டம் வழங்கினார். 1954 இல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.