கணவன் மனைவி ஜோக்ஸ் 3

bookmark

மனைவி : கவிதா, கமலா, கிருபா, கீர்த்தனா - இவங்க பின்னாடியெல்லாம் நம்ப பையன் சுத்தறான் .. .. .

கணவன் : மு-வலமாக இருக்கே

-***-


மனைவி : ஏங்க, என் பிரசவ நேரத்தில் உங்களுக்கு உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?

கணவன் : வயதான காலத்தில் அவங்களை ஏன் சிரமப் படுத்துறே! பேசாம உன் தங்கையை வரவழைச்சிடு!

-***-


கணவன் : “இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம் பக்கத்திலே இருப்பவங்கள் பார்த்தா சிரிப்பாங்க... தெரியுமா?“

மனைவி : “அப்போ நாம போடுற சண்டை அவ்வளவு தமாஷாவா இருக்கு!“

-***-


மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா?

கணவன் : ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே!

-***-


கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற ?

மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!

-***-