கணவன் மனைவி ஜோக்ஸ் 4

bookmark

கடைக்காரர்: நீங்க உடைத்த பொருள் 100 வருஷம் பழையது தெரியுமா?

நபர்: அப்பாடா! நான் அதப் புதுசுனு நெனச்சு பயந்துட்டேன்.

-***-


மனைவி : நம் பைய‌ன் போ‌ன் ப‌ண்‌ணி ரொ‌ம்ப நாளாகு‌‌தி‌ல்ல..

கணவ‌ன் : ‌ம்‌ம்‌ம்.. மனை‌வி : கடைசியா எப்போ போ‌ன் ப‌ண்‌ணினா‌ன்?

கணவன் : ஒரு ‌நி‌மிஷ‌ம் இரு. செக் பு‌க்கை‌ப் பார்த்து சொல்றேன்.

-***-


கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவன்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?

மனைவி : அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிர இருக்காங்களே, அதான்!

-***-


மனைவி : என்னங்க.. நீங்க புட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா ?

கணவன் : எப்படி கண்டுபுடிச்சே?

மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..!

-***-


மனைவி : “வர வர எனக்கு இந்த நகை, புடைவைகள் பேரில் இருக்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க“

கணவன் : “நிஜமாவா சொல்லற?“

மனைவி : “ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகைகளையும், பழைய புடவைகளையும் கட்டிண்டு இருக்கிறது.....“

-***-