கணவன் மனைவி ஜோக்ஸ் 2

bookmark

கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ?

மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.

-***-


கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!

-***-


மனைவி : என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க

கணவன் : வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகளாம்...

மனைவி : ???????????????????

-***-


மனைவி : ரோஸி‌ங்கறது யாரு‌ங்க?

கணவன் : ‌வி‌‌ழி‌த்தபடி, அது கு‌திரை‌ப் ப‌ந்தய‌த்‌தி‌ல் நான் பணம் கட்டு‌ம் குதிரையின் பெயர், ஏ‌ன் கேட்கிறாய்?

மனைவி : அப்படியா, அந்த குதிரை இன்று மதியம் உங்களுக்கு போன் ப‌ண்ணு‌ச்சு.. அதா‌ன் கே‌ட்டே‌ன்.

-***-


கணவன் : என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு"

மனைவி : பொங்கலிலே சர்க்கரை போட்டிருக்கேன்...!

-***-