ஓசோன்

bookmark

"நம்ம ஆளு கொத்தனாரோட எங்கே போறாரு?"

"ஓசோன் படலத்திலே ஓட்டை விழுந்திருக்கறதாச் சொல்றாங்க இல்லியா, அதை அடைக்கத்தான்."

"தலைவர் ஏன் பொதுக்கூட்டங்கள்ல பேசறதை தவிர்க்கிறாரு?"

"தனியா புலம்பக் கூடாது"னு டாக்டர் அட்வைஸ் பண்ணியிருக்காராம்!"

தலைவர்: "ச்சே... என்னோட எடைக்கு எடை நாணயம் கொடுக்கிறாங்களே எப்படியும் ஒரு பெரிய தொகை சேரும்னு நினைச்சேன். கடைசியில இப்படி ஏமாத்திட்டானுங்களே...."

தொண்டன்: "ஏன் தலைவரே, கொடுக்கவே இல்லையா?"

தலைவர்: "கொடுத்தாங்க. எல்லாம் நாலனா, எட்டனாவா கொடுத்துட்டானுங்க. செல்லாக்காசாப் போச்சு... எண்ணிப்பார்த்தா ஐநூறு கூட தேறல..."

"ஏண்டி டாக்டர் உன்னை எதையும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல..."

"ஆமாம்...அதுக்கென்ன...?"

"நீ இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கியே...!"

ஒருத்தி: எங்க இருபததைந்தாவது மணநாளுக்கு ராப்பிச்சை ஒரு பரிசு அனுப்பியிருக்கான்

மற்றவள்: என்ன அது?

ஒருத்தி: ருசியாக சமைப்பதெப்படிங்கற புஸ்தகம்தான்.