எஸ். என். சோமையாஜுலு
வாழ்க்கை வரலாறு
எஸ். என். சோமையாஜுலு ஒரு தமிழக அரசியல்வாதி, இந்திய விடுதலைப்போராட்ட வீரர், மற்றும் சமூக சேவகர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்க்கு 1952ல் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கிராமம் இவரது சொந்த ஊர். இவரது தந்தையார் பெயர் சோமசுந்தரம்,தாய் சீதையம்மாள். இவர் இளம்பருவத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்குகொண்டதால், தாமதமாக திருமணம் செய்துகொண்ட இவருக்கு 6 குழந்தைகள்.
இவர் 1927ல் மதுரையில் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம், 1927ல் சென்னையில் நீல் சிலையை அகற்ற போராட்டம் மற்றும் 1931ல் கோவில்பட்டியில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் ஆகிய போராட்டங்களில் தீவிர பங்கு கொண்டு சிறைசென்றார். மேலும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு உடையவர் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.