எதிர்கொள் படலம் - 1118
மிதிலை மாந்தரும் உடன்வருதல்
1118.
கங்கை நீர் நாடன் சேனை.
மற்று உள கடல்கள் எல்லாம்
சங்கு இனம் ஆர்ப்ப வந்து
சார்வன போல. சார.
பங்கயத்து அணங்கைத் தந்த
பாற்கடல் எதிர்வதேபோல்.
மங்கையைப் பயந்த மன்னன்
வள நகர் வந்தது அன்றே.
மற்று உள கடல்கள் எல்லாம்- (பாற் கடலைத் தவிர) மற்றைய
கடல்கள் யாவும்; சங்கு இனம் ஆர்ப்பவந்து சார்வன போல -
சங்குகளின் கூட்டம் ஆரவாரம் செய்த வண்ணம் வந்து.
(திருப்பாற்கடலை) சேர்வன போன்று; கங்கைநீர் நாடன் சேனை சார
- கங்கைபாயும் கோசல நாட்டுத் தசரத மன்னனது சேனைகள்
மிதிலை வந்து சேர; மங்கையைப் பயந்த மன்னன் வளநகர் -
சீதையை மகளாகப் பெற்ற சனக மன்னனது வளம் மிக்க மிதிலை
நகர்; பங்கயத்து அணங்கைத் தந்த பாற்கடல் எதிர்வதேபோல் -
தாமரை மலரில் வதியும் திருமகளைத் தந்த திருப்பாற்கடலானது (பிற
கடல்களை) எதிர்கொண்டு வர வேற்பது போன்று; அன்று வந்தது -
அப்பொழுது. தசரத சேனையினை எதிர்கொண்டு வரவேற்றது.
சீதை திருமகளின் கூறு ஆதலால் அவள் தோன்றிய திருப்பாற்
கடலைச் சீதை இப்போது தோன்றியுள்ள மிதிலைக்குப் பொருத்த முற
உவமித்தார். தசரத சேனையைப் பிறகடல்கள் அனைத்துமாக
உவமித்தலால் அதன் பெருக்கம் தெரிவித்தார். சங்கங்கள் முழங்கச்
சேனை எதிர் வருவது. சங்குகள் முழங்கும் கடலுக்கு உவமை. அது
பெருமையாலும். ஒலியினாலும் பொருந்தும் உவமையாயிற்று.
சரயு நதிதான். கோசலத்துக் குரிய ஆறு எனினும். கோசல நாடு
கங்கை நதி வரையும் பரவியிருத்தலின்” கங்கை நீர் நாடன்” என்றார்.
இலக்குவனை. “கங்கைக்கு இறைவன்” (கம்ப. 1718) என்பார். 5
