உலாவியற் படலம் - 1195

bookmark

1195.    

மான மாகதர். மச்சர். மிலேச்சர்கள்.
ஏனை வீர இலாடர். விதர்ப்பர்கள்.
சீனர். தெங்கணர். செஞ் சகர். சோமகர்.
சோனகேசர். துருக்கர். குருக்களே.
 
மான    மாகதர். மச்சர். மிலேச்சர்கள் - பெருமை மிக்க  மாகத
மன்னரும்  மச்ச நாட்டரசரும். மிலேச்ச தேசத்தரசரும்; - ஏனை   வீர
இலாடர்.  விதர்ப்பர்கள்  -  மற்றுமுள்ள வீரமிக்க இலாட  மன்னரும்.
விதர்ப்ப மன்னரும்; சீனர். தெங்கணர். செஞ்சகர். சோமகர் -  (மகா)
சீன  தேசத்தரசரும்.  தெங்கண  தேசத்தரசரும்.   செம்மையான    சக
தேசத்தரசரும்.   சோமக   நாட்டரசரும்;   சோனகேசர்.   துருக்கர்.
குருக்களே   -   சோனக  நாட்டரசரும்.  துருக்க  தேச   மன்னரும்.
குருநாட்டரசர்களும்.                                       48