இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.

bookmark

குரு: இறைவனின் புனிதரே, துணை நிற்க வருவீர்,
தேவனின் தூதரே, எதிர் கொண்டு வருவீர்!

எல்.: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.

குரு : உம்மைத் தம்மிடம் அழைத்த கிறிஸ்து
உம்மை ஏற்றுக் கொள்வாராக.
தூதரும் உம்மை ஆபிரகாமின்
மடியில் கொண்டு சேர்ப்பாராக!

எல்.: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.

குரு.: நித்திய இளைப்பாற்றியை ஆண்டவரே,
இவருக் கின்று அளித்திடுவீரே,
முடிவில்லா ஒளி இவர்மேல் ஒளிர்வதாக

எல்.: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.