இறைவனின் புனிதரே துணை நிற்க வருவீர்

bookmark

தேவனின் தூதரே எதிர்கொண்டு வருவீர் 
இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு 
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுப்பீர் 
உம்மை தம்மிடம் அழைத்த கிறிஸ்து 
உம்மை ஏற்றுக் கொள்வாராக 
தூதரும் உம்மை ஆபிரகாமின் 
மடியில் கொண்டு சேர்ப்பாராக 

இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு 
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுப்பீர் 

நித்திய இளைப்பாற்றியை ஆண்டவரே 
இவருக்கு இன்று அளித்திடுவீரே 
முடிவில்லா ஒளி இவர்மேல் ஒளிர்க 
இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு 
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுப்பீர்