இயேசுவின் இனிய தோழனே இனிகோ நாம வீரனே
இயேசுவின் இனிய தோழனே இனிகோ நாம வீரனே
இனிய உம் புகழினை இசையினில் பாடியே
வந்தோம் உம் துணை நாடி (2)
1. நிலையற்ற உலக மகிமையை வாழ்வில்
நினைந்தே துறந்த உறுதிகொள் வீரனே (2)
உன்னதன் உயர்மிகு மகிமையே வாழ்வென - 2
எண்ணி யாம் வாழ உறுதுணை புரிவாய்
2. நீதி நேர்மை நிறைந்த நல் உலகம் நிலைத்திட
விழையும் உன் வீரர் நாங்கள் (2)
அன்பு தேவனில் அருள்மிகு வழியினில் - 2
என்றும் யாம் வாழ வரமருள் பொழிவாய்
பீஏ டுஎகூயூடி
