மக்களின் புனிதரே கஸ்பாரே
மக்களின் புனிதரே கஸ்பாரே
மனம் நிறைந்து உம்மைப் போற்றுகின்றோம் (2)
மனுக்குலத்தையே தம் இரத்தத்தால் மீட்ட
மரியின் மைந்தன் அன்புத் தொண்டரே
மகிழ்வோடு உம் புகழ் பாடுகின்றோம்
1. அன்புக்காக இறந்த தேவன் இயேசு மட்டும் தான்
அவர் இரத்தம் சிந்தி மீட்டதும் என்றும் உண்மை தான் (2)
இதை உலகிற்கு அறிவிக்கும் முரசாகவே - 2
இறைவன் தேர்ந்து கொண்ட நம் கருவியும் நீதான்
இயேசுவின் திருரத்தத்தின் அப்போஸ்தலரே
2. அனைவரையும் திருரத்தத்தால் மீட்க விரும்பியே
ஆயிரம் நாவுகள் வேண்டும் என்றீரே (2)
அன்பு என்னும் ஆயுதமும் உள்ளத்தில் ஏந்தி - 2
அச்சமின்றி நற்செய்தி போதித்தவரே
இயேசுவின் திருரத்தத்தின் அப்போஸ்தலரே
பீஏ சிஷ்மணூசு றூசுறுசூயூள
