இம்சை அரசன்

bookmark

அமைச்சர்: மன்னா எதிரிப்படை ஆட்சியை கைப்பற்றி விட்டார்கள்.

இம்சை அரசன்: ஆம் அமைச்சரே... வாரும் இருவரும், சென்று பாதாள அறையில், ஐந்து வருடங்கள் பதுங்கி விடலாம்.

அமைச்சர்: க க க போ... நீரல்லவா மன்னர்...

"உங்க குடும்பத்துக்குன்னு என்ன செய்திருக்கீங்க...?"

"எட்டு புள்ள பெத்திருக்கோமே..!"

"எல்லா படத்துலயும் இன்ஸ்பெக்டர் வேஷத்துல நடிச்சது நல்லதாப் போச்சு..."

"ஏன்...?"

"கபாலி எனக்கும் மாமூல் தர ஆரம்பிச்சுட்டான்!"

ஒருவன்: எங்க வீட்டுக்கு வந்திருந்த திருடன் ரொம்ப பொறுப்புள்ளவனா இருப்பான் போலிருக்கு.

மற்றவன்: எதை வச்சு சொல்றே?

ஒருவன்: போலீஸ்கிட்டே நாங்க காமிக்க என்னென்ன அயிட்டம்கள் திருடியிருக்கான்னு ஒரு லிஸ்ட் எழுதி வச்சிட்டுப் போயிருக்கான்னா பார்த்துக்கோயேன்.

"காதலுக்கு எந்த அம்மா அப்பாவும் ஒத்துக்க மாட்டேங்குறாங்களே ஏன்?"

"செத்துப்போன அம்மா அப்பா கூடவா?"