இந்திய மொழிகளில் இராமாயணம்
தமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர்.
வடமொழி இராமாயண நூல்கள்
- யோக வசிஷ்ட (அல்லது) வசிஷ்ட இராமாயணம் (பொ.ஊ. 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டு)
- அத்யாத்ம இராமாயணம் (பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டு, இராமசர்மர் எழுதியது)
- அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்ட காலகட்டம்)
- ஆனந்த இராமாயணம் (பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டு) வால்மீகி பெயரால் வழங்கப்படுவது.
