அரசியற் படலம் - 170
170.
மொய் ஆர்கலி சூழ் முது பாரில். முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்ந்த. யாரும்
செய்யாத. யாகம் இவன் செய்து மறந்த மாதோ.
மொய் ஆர்கலி சூழ் முது பாரில்- நிறைந்த கடலால் சூழ்ப்
பட்டதும் பழமை வாய்ந்ததுமான இந்த உலகத்தில்; முகந்து தானக்
கை ஆர்புனலால்- வாரிமுகந்து. தானம் செய்கின்ற கையில் நிறைந்த
நீரினால்; நனையாதன கையும் இல்லை - நனைக்கப் பெறாத
கைகளும் இல்லை; மெய்யாய வேதத்துறை வேந்தருக்கு- நிலைபெற்ற
வேத நெறியில் நிற்கும் அரசர்களுக்கு; ஏய்ந்த யாரும் செய்யாத
யாகம்-பொருந்தியனவான வேறு எவரும் செய்ய இயலாது நின்ற
யாகங்கள்; இவன் செய்து மறந்த- இந்த. தசரத மன்னனால்
செய்யப்பட்டு மறக்கப் பெற்றவையாகும்.
மதோ: அசை. மொய்: வலிமை இங்கு நிறை உணர்த்தி நின்றது.
ஆர்கலி: கடல் (நிறைந்த ஓசை உடையது) என்பது பொருளாம்.
‘முதுபார்’ என்றது. உலகின் தொன்மையை நினைந்தென்க. வேந்தர்க்கு
ஏய்ந்த யாகங்கள். இராச சூயம்- அசுவமேதம் முதலியனவாகும். வேறு
எவராலும் செய்ய இயலாது நின்ற யாகங்கள் எல்லாம். தசரத மன்னன்
எப்போதோ செய்து மறந்துவிட்டவை.
விட்டவையாம்: தானக்கை: தானம் தரும் கை. தானம்
வழங்குவதற்கு முன். நீர் வார்த்தல் மரபு. தயரதன் வார்த்த நீரால்
நனையாத கைகளே இல்லை என்கிறார் கவி. இது. பிறிதினவிற்சி
யணியாம். 3
