அகலிகைப் படலம் - 539

bookmark

மூவரும் விதேகநாட்டை அடைதல் (539-540)

539.    

என்று கூறலும். வியப்பினோடு
   உவந்தனர். இறைஞ்சி.
சென்று தீர்ந்தனர் கங்கையை;
   விசாலை வாழ் சிகரக்
குன்றுபோல் புயத்து அரசன் வந்து.
   அடி இணை குறுக.
நின்று. நல் உரை விளம்பி.
   மற்று அவ் வயின் நீங்கா.
 
விசாலை  -   இட்சுவாகு   -   அலம்புசை   மகனான   விசாலன்
ஏற்படுத்தியது.

விசுவாமித்திரன்  கங்கையின்   வரலாற்றைக்   கூறியபின்.  மூவரும்
கங்கையைக் கடந்து விசாலையை அடைந்தார் என்பது.           5-30