அகலிகைப் படலம் - 533
கங்கையை ஒரு சிறிது பூமியில் விடுதல்
533.
‘புல் நுனித் தரு பனி என.
வர நதி. புனிதன்
சென்னியில் கரந்து ஒளித்தலும்.
வணங்கினன். திகைத்து.
மன்னன் நிற்றலும். “வருந்தல்; நம்
சடையள். வான் நதி இன்று”
என்ன விட்டனன். ஒரு சிறிது;
அவனி போந்து இழிந்தாள்.
போந்து- புகுந்து - மருஉ மொழி; புல் நுனி தரு பனி என -
கங்கைக்கு உவமை.
கங்கை சிவனது சடையில் மறைந்துவிட்டதைப் பகீரதன் கண்டு
திகைத்தான். அச்சிவன் அவன் கலக்கத்தைப் போக்கிக் கங்கையில்
சிறிதுவிட அது பூமியில் பெருகியது என்பது. 5-24
