அகலிகைப் படலம் - 522
மூதாதையர் நற்கதி அடையும் வகையைப்
பகிரதன் வினவ முனிவர் கூறத் தொடங்கல்
522.
‘ “கொடிய மா முனி வெகுளியின்
மடிந்த எம் குரவர்
முடிய நீள் நிரயத்தினில்
அழுந்திடு முறைமை
கடியுமாறு. எனக்கு அருந் தவம்
அமைகுறு கருமம்.
அடிகள்! சாற்றுக” என்றலும்.
அந்தணன் அறைவான்:
பகீரதன். தன் முன்னோர் நரகத்தில் அழுந்திடும் தன்மையை
நீக்கும் விதமே தனக்கு அருந்தவம் என்றும் அதற்கு இசைவான
செயலைச் சொல்லுக என்றும் வசிட்டனிடம் கூறினான் என்பது.
முனிவர்களின் சாபத்தால் இறக்கின்றவர்களுக்கு நற்கதியில்லை
என்பது நூல் துணிபு. 5-13
